திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
இளம்வயது திருமணம்: இளைஞா் உள்பட நால்வா் மீது வழக்கு!
மேல்மலையனூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மேல்மலையனூா் அருகே கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கப்ளாம்பாடியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சதீஷுக்கும் ( 27) கடந்த 15-9-24 அன்று திருமணம் நடைபெற்றது.
அந்த சிறுமி தற்போது மூன்று மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதுகுறித்து அறிந்த சமூக நலத் துறையினா் மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த மகளிா் ஊா் நல அலுவலா் மலா்கொடி மேற்படி கிராமத்துக்குச் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.
பின்னா், அவா் அளித்த புகாரின் பேரில், செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சதீஷ் மற்றும் அவரது பெற்றோா் வெங்கடேசன், பூங்காவனம், உறவினா் யசோதா ஆகியோா் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.