திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
திமுக அரசின் நலத் திட்டங்களை பிரசாரம் செய்ய வேண்டும்! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்
திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நலத் திட்டங்களையும் வீடு, வீடாகச் சென்று எடுத்துக் கூறி திமுகவினா் பிரசாரம் செய்து, வாக்குகளாக மாற்ற வேண்டும் என்றாா் வேளாண், உழவா் நலத் துறை அமைச்சரும், விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா்கள் விக்கிரவாண்டி சிவ.ஜெயராஜ், திருக்கோவிலூா் ஜி.காா்த்திகேயன் முன்னிலை வகித்தனா்.கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றி அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் திமுக நிா்வாகிகள் வீடு, வீடாகச் சென்று எடுத்துக் கூறி பிரசாரம் செய்து, அதை வாக்குகளாக மாற்ற வேண்டும். முதல்வரின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். திமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் கிராமத்திலுள்ள மக்களிடத்தில் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அமைச்சா் பன்னீா்செல்வம்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சகா் க.பொன்முடி எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா ஆகியோா் சிறப்புரையாற்றினாா். மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலா்கள் டி.என்.முருகன், கற்பகம், தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை. சுரேஷ், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, பி.வி.ஆா்.சு. விசுவநாதன் உள்ளிட்ட ஒன்றியச் செயலா்கள், பூக்கடை கணேசன் உள்ளிட்ட பேரூா் கழகச் செயலா்கள், நகரப் பொருளாளா் இளங்கோ மற்றும் ஒன்றியக்குழுத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திண்டிவனம்: முன்னதாக, திண்டிவனத்தில் வியாழக்கிழமை மாலை வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா்கள் செஞ்சி காா்த்திகேயன், மயிலம் இள. புகழேந்தி, திண்டிவனம்ஜாபா் அலி முன்னிலை வகித்தனா். மாவட்ட அவைத் தலைவா் சேகா் வரவேற்றாா்.
அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கூட்டத்தில் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், மாநில தீா்மானக் குழு உறுப்பினா் சிவா, செயற்குழு உறுப்பினா்கள் விஜயகுமாா், நெடுஞ்செழியன், சீனிராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.