செய்திகள் :

புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக

post image

அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ``தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக தயாரிக்கப்படுகிறது. அதன்பிறகு தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களால், அதே டாஸ்மாக்கில் அந்த போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

புதுச்சேரியில் இருந்து தினசரி குறைந்தது ஒருகோடி ரூபாய்க்கு மேல் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒருகோடி என்றால், மாதத்திற்கு 30 கோடி ரூபாய். ஆண்டுக்கு சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு புதுச்சேரியில் இருந்து போலி மதுபானம் தயாரித்து கடத்தப்படுகின்றது.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

கடந்த 10 தினங்களுக்கு முன்பு இப்படி கடத்தப்பட்ட போலி டாஸ்மாக் மதுபானம், புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டது என தமிழக கலால்துறை கண்டுபிடித்தது. அது தொடர்பாக யார் யார் மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர் என்பது தெரியவில்லை. டாஸ்மாக்கில் தமிழக தி.மு.க ஆட்சியாளர்களால் நடத்தப்படும் ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, இந்த வழக்கு குறித்தும் விசாரணை செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அரசுக்கு மருத்துவ இடங்களை கொடுக்காமல் இருக்கின்றன. மீதமுள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 650 இடங்களில், 50 சதவிகித இடங்களான 325 இடங்கள் அரசுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் அதைப் பெறாமல் புதுச்சேரி மாணவர்களை வஞ்சித்து வருகின்றனர். இந்த ஆண்டும் அதே நிலை நீடிக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அரசின் 50 சதவிகித இடங்களைப் பெறாமல், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளை அழைத்துப் பேசி வருவது தேவையற்ற ஒன்றாகும்.

தேசிய மருத்துவக் கவுன்சிலின் ஆணைப்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். கடந்த காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் 50 சதவிகித இடங்களைப் பெறாமல், வெறும் 36 சதவிகித இடங்களைப் பெறுவது புதுச்சேரி மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். முந்தைய துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், அரசுக்குரிய 50 சதவிகித இடங்களைப் பெறுவதற்கு முயற்சி எடுத்தார்.

முதல்வர் ரங்கசாமி

அதேபோல் தற்போதைய ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அரசுக்கு வர வேண்டிய 50 சதவிகித மருத்துவ இடங்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து சம்பந்தமாக சுயேட்சை எம்.எல்.ஏ நேரு அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. முன்னாள் முதலமைச்சர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம் ஆகியவர்கள் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என சுயேட்சை எம்.எல்.ஏ கொடுக்கும் மனுவில் கையெழுத்து போட்டிருக்கின்றனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி  அதிகாரத்தில் இருந்த போது மாநில அந்தஸ்து பெற்று தராதவர்கள் தற்போது மாநில அந்தஸ்திற்காக  துளிகூட வெட்கமே இல்லாமல்  கையெழுத்து போடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்” என்றார்.

'அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!' - சொல்கிறார் நாதக நத்தம் சிவசங்கரன்!

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே, அதில் பயணிக்கும் நத்தம் சிவசங்கரன் தற்போது மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வகிக்கிறார். ஆனால் அண்மைகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒதுங்கியிருப்பத... மேலும் பார்க்க

'தவெகவும் பாஜகவும் ஒண்ணு..!' - திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபல... மேலும் பார்க்க

``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலு... மேலும் பார்க்க

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் கா... மேலும் பார்க்க

தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் கூட்ரோடு அருகே, நான்குவழிச் சாலை அமைத்து சில வருடங்கள் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை செல்ல வாகன ஓட்ட... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்' - மனோ தங்கராஜ் காட்டம்!

பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் ஆவின் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆவின் பொருள்கள் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆவினில் டிலைட் பால... மேலும் பார்க்க