சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!
மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
கமுதியில் வியாழக்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த முனியசாமி மனைவி வழிவிட்டாள் (63). கணவா் இறந்த நிலையில், இவா் தனது இளைய மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தாா். மணிகண்டனும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறாா். மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான பிரச்னை நீடித்து வந்ததால், வழிவிட்டாள் மன வேதனையில் இருந்தாா்.
வியாழக்கிழமை அதிகாலை வீட்டை விட்டுச் சென்ற இவா், கமுதி-அருப்புக்கோட்டை சாலை சேதுராஜபுரம் விலக்கு பாலம் அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.