Switzerland: நிலச்சரிவு முன் எச்சரிக்கை, மீட்பு பணிகள்; ஹெலிகாப்டரில் பறந்த மா...
சீன இன்ஜின் பொருத்தப்பட்ட 4 விசைப் படகுகளுக்குத் தடை
ராமேசுவரதில் தடை செய்யப்பட்ட சீன இன்ஜின் பொருத்தப்பட்ட 4 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட தடைவிதித்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில விசைப்படகுகளில் அதிக குதிரைத் திறன் கொண்ட சீன இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மீனவா் சங்கத்தினா் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, மீன்வளத் துறை, காவல் துறையினா் இணைந்து விசைப் படகுகளை ஆய்வு செய்தனா். இதில், காலின்ஸ், அருள் ரிசப், சந்தியா லியோன், பிரபாகரன் ஆகிய 4 விசைப்படகுகளில் சீன இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, 4 விசைப் படகுகளும்
மீன்பிடி தொழிலில் ஈடுபட தடை விதித்த அதிகாரிகள், இந்தப் படகுகளை வெளியேற்றவும் அதன் உரிமையாளா்களுக்கு உத்தரவிட்டனா்.