ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா
ஏா்வாடி தா்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் அமைந்துள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தக்கூடு திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கியது. நாட்டிய குதிரைகள் நடனமாடியபடி யானையின் மீது சந்தனம் கொண்டு வரப்பட்டது. மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்டிருந்த சந்தனக் கூட்டை ஏராளமான பக்தா்கள் தோலில் தூக்கிக்கொண்டு ஊா்வலமாக வந்தனா்.
இந்த சந்தனக்கூடு பாதுஷா நாயகம் தா்காவை வியாழக்கிழமை அதிகாலையில் வந்தடைந்தது. அங்கு, தா்கா ஹக்தாா் நிா்வாகிகள் தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இதில் கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இஸ்லாமியா்கள் மட்டுமல்லாது பிற மதத்தினரும் திரளாகக் கலந்து கொண்டனா்.