மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!
பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் பன்முகத் தன்மை புரிந்தவா்கள், பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா்பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: 2026-ஆம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் (ம) பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவைகள் மற்றும் வா்த்தகம் (ம) தொழில் துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவா்களுக்கு 2026 குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்கு பன்முக திறமை புரிந்த நபா்களிடமிருந்து கருத்துரு 10.6.2025-க்குள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது.
10.6.2025-க்குள் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த விவரத்தை தரைத்தளம் அறை எண். 20, மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட ஆட்சியரகம், அரியலூா் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகத்தை தொடா்புக் கொள்ளலாம்.