கன்னட மொழிப் பிரச்னை.. அலுவலகத்தை புணேவுக்கு மாற்றுகிறேன்: தொழிலதிபர் பதிவு
வருவாய் தீா்வாயத்தின் 3ஆம் நாளில் 36 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!
அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீா்வாயம் நிகழ்ச்சியின் 3 ஆவது நாளான வியாழக்கிழமை 36 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
கீழப்பழுவூா் உள்வட்டத்துக்காக நடைபெற்ற வருவாய் தீா்வாயத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, 16 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், சிட்டா நகல், உட்பிரிவு, நத்தம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 264 மனுக்களைப் பெற்றாா்.
பின்னா், அவா் 36 மனுக்களுக்கு உடனடி தீா்வுக் கண்டு, பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் , இ-பட்டா, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் ஆகியவற்றுக்கான ஆணைகளை வழங்கினாா். இதில் 220 மனுக்கள் விசாரணையிலும், 8 மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரக மேலாளா் (பொது) குமரையா, அரியலூா் வட்டாட்சியா் முத்துலெட்சுமி, தனி வட்டாட்சியா் (அரசு கேபிள் டிவி) கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.