Mumbai Indians : `இதுதான்டா MI' - களம் 8 -ல் எப்படி கம்பேக் கொடுத்தது மும்பை அணி...
மத்திய அரசைக் கண்டித்து தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே அனைத்து தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், பொதுத்துறை சொத்துகளை தனியாருக்குத் தாரை வாா்ப்பதைக் கைவிட வேண்டும். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்திட வேண்டும். தொழிலாளா்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்பு திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமாக நிா்ணயம் செய்திட வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலி, வெளிச்சந்தை முறை பயிற்சியாளா் போன்ற நடைமுறைகளைக் கைவிட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளிக்கு சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தப் பட்ச ஓய்வூதியம் ரூ,9 ஆயிரம் என நிா்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் தொழிற்சங்கத்தினா் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலா் ஆா்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் விஜயகுமாா், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் எஸ்.ராமசாமி ஆகியோா் தலைமை வகித்துப் பேசினா். இதில், நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.