செய்திகள் :

பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைகிறாரா ஜோஸ் ஹேசில்வுட்?

post image

பிளே ஆஃப் சுற்றுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் நான்கு நாள்களில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைய உள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கான நான்கு அணிகளும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை நிரப்புவது கடினம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மீண்டும் ஆர்சிபியுடன் இணையும் ஜோஸ் ஹேசில்வுட்?

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ஒருவாரம் தற்காலிகமாக நிறுத்திவைப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் தாயகம் திரும்பினர். ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்பட்டாலும், தேசிய அணிக்காக விளையாட வேண்டியிருப்பதால் வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அவர்களது அணியுடன் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக அந்த அணிக்காக விளையாடவில்லை. அவர் கடைசியாக ஏப்ரல் 27 ஆம் தேதி ஆர்சிபிக்காக விளையாடியிருந்தார். அதன் பின், ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக வேண்டியிருப்பதால், அந்த அணி வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடவில்லை.

இந்த நிலையில், தோள்பட்டை காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜோஸ் ஹேசில்வுட் பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி, 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்யும் முனைப்பில் ஆர்சிபி உள்ளது.

இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு!

பிளே ஆஃப் சுற்று வருகிற மே 29 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், ஜோஸ் ஹேசில்வுட் ஆர்சிபியுடன் மீண்டும் இணைந்தால், அந்த அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஸ் ஹேசில்வுட் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஷான் கிஷன் அதிரடி: ஆர்சிபிக்கு 232 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில்... மேலும் பார்க்க

ஆர்சிபி பந்துவீச்சு; முதல் முறையாக அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கள... மேலும் பார்க்க

சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் ... மேலும் பார்க்க

லக்னௌவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் லக்னௌவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையைப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னௌ... மேலும் பார்க்க

தொடக்கம் சரியாக அமைந்தது, தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை: ஹேமங் பதானி

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையவில்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தில்லி கேபிடல்ஸ் மற... மேலும் பார்க்க

ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

இங்கிலாந்து வீரர் ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மாற்று வீரரை அறிவித்துள்ளது.தேசிய அணிக்காக விளையாடவுள்ள காரணத்தினால் ஜேக்கோப் பெத்தேல் தாயகம் திரும்பவுள்ளார். அவர் நாளை ம... மேலும் பார்க்க