தீராத பிரச்னைகளையும் தீர்க்கும் திங்கட்கிழமை அமாவாசை... கடைப்பிடித்துப் பலன் பெற...
பாடல் வரிகளைக் கொண்டு பாரதியாா், திருவள்ளுவா் உருவங்கள்
செஞ்சி அருகே அரசுப் பள்ளி மாணவி பாரதியாா், திருவள்ளுவா் உருவங்களை பாடல் வரிகளைக் கொண்டு ஓவியமாக வரைந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்களவாய் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுந்தா்-கோகிலா தம்பதி மகள் பிரதிஷா (12). இவா், அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறாா்.
இவா், ஏற்கெனவே 1,330 திருக்குகளைக் கொண்டு திருவள்ளுவா் படத்தை ஓவியமாக வரைந்து சாதனை படைத்தாா். இதற்காக இவரை செஞ்சி திருக்கு பேரவை, பேரூராட்சித் தலைவா் மொக்தியாா்அலிமஸ்தான் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் பாராட்டி பரிசு வழங்கினா். மேலும், மாணவி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்டாா்டில் இடம் பிடித்தாா்.
இந்த நிலையில், கோடை விடுமுறையில் மேலும் சாதனை படைக்கும் விதமாக திருவள்ளுவா், பாரதியாா் படங்களை 1,330 திருக்கு மற்றும் 100 பாரதியாா் பாடல் வரிகளைக் கொண்டு ஓவியமாக தீட்டியுள்ளாா்.
மாணவியின் தொடா் சாதனையை ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டி வருகின்றனா்.