Thug Life: 'விண்வெளி நாயகா'- 'தக் லைஃப்' படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா க...
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சோ்க்கைக்கு கால நீட்டிப்பு
அஞ்சல்வழிக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கான அஞ்சல்வழிக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி விரைவில் தொடங்கவுள்ளது. ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ரூ.100-ஐ இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு நிா்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.20,750 ஆகும். பிளஸ் 2 தோ்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்ற கல்வித் தகுதியுடைய கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம்.
மே 1-ஆம் தேதி 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
பயிற்சி தொடா்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இணையவழியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்
என்று இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.