பஞ்சாபில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்
பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் அரோரா. ஊழலில் ஈடுபட்டதற்காக கூறி இவரை ஜலந்தர் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் அரோரா இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க ஊழல் தடுப்புப் பிரிவு சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் தலைமறைவு!
நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சட்டவிரோத அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மிரட்டி பணம் பறித்ததாக ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமை ஆரோராவின் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் சோதனை நடத்தியிருந்தனர்.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்ட பதிவில், ‘ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.