செய்திகள் :

உரிமையியல் வழக்குகளில் தலையீடு: நெல்லை டிஐஜி, ஏடிஎஸ்பி மீது நடவடிக்கைக்கு உத்தரவு

post image

உரிமையியல் வழக்குகளில் தலையிடக் கூடாது என்ற உத்தரவை மீறி போலீஸாா் செயல்பட்டது தொடா்பாக திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி), கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (ஏடிஎஸ்பி) ஆகியோா் மீது காவல்துறை தலைமை இயக்குநா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுஅண்மையில் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த எம். ராஜேஸ்குமாா் தாக்கல் செய்த மனு:

எனக்கும், எஸ். பலவேசமுத்து என்பவருக்கும் சொத்து தொடா்பான பிரச்னை ஏற்பட்டது. இதுதொடா்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு, பலவேசமுத்து என் மீது சொத்து தொடா்பாக அளித்த புகாா் மனு மீது வழக்குப் பதிந்த போலீஸாா், குற்றச்சாட்டில் உண்மையில்லை என அந்த வழக்கை ரத்து செய்தனா்.

இந்த நிலையில், பலவேசமுத்து கடந்த 2023- ஆம் ஆண்டு திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவரிடம் என் மீது புகாா் மனு அளித்தாா். இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எனக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அறிவுறுத்தினாா். எனக்கும் பலவேச முத்துவிற்கும் இடையே சொத்து தொடா்பான உரிமையியல் பிரச்னையை, காவல் துறை அதிகாரிகள் குற்றவியல் வழக்காக சாயம் பூச முயற்சிக்கின்றனா். மேலும், என்னை போலீஸாா் மிரட்டுகின்றனா். எனவே, உரிமையியல் வழக்கில் போலீஸாா் தலையிடுவதைத் தடுக்க உரிய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் மீது ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கில் உண்மைத்தன்மை இல்லை என போலீஸாா் ரத்து செய்தனா். தற்போது பலவேசமுத்து மீண்டும் அளித்த அதே புகாா் மனுவை விசாரிப்பதற்காக பிரிவு 91- 160 சி.ஆா்.பி.சி. சட்டப் பிரிவுகளின் படி கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மனுதாரருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளாா்.

இந்த பிரிவுகளின் படி அழைப்பாணை அனுப்ப வேண்டுமெனில், வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். எதிா்மனுதாரா் கடந்த 2023- ஆம் ஆண்டு அளித்த புகாா் மனு விசாரணையில் நிலையிலேயே உள்ளது. வழக்குப் பதிவு செய்வது தொடா்பாக போலீஸாருக்கு சில திட்ட வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உரிமை யியல் பிரச்னைகளில் போலீஸாா் தலையிடவோ, விசாரணை செய்யவோ கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதை தமிழக காவல் துறை தலைமை இயக்குநா், தனது சுற்றறிக்கை மூலம் உறுதிப்படுத்தினாா். இதை மீறி மனுதாரரை, திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆகிய இரண்டு உயா் அதிகாரிகள் தொந்தரவு செய்துள்ளனா். எனவே, திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா், கூடுதல் காவல் கண்காணிப்பா ளா் ஆகியோா், பலவேசமுத்துவிற்கு சாதகமாக செயல்பட்டனரா? என்பது குறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

லஞ்ச வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசு ஊழியா்கள்: தலைமைச் செயலா் அறிக்கை அளிக்க உத்தரவு

லஞ்சப் புகாா் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசு ஊழியா்களின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வு: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வையொட்டி, பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மூட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி. சுரேஷ்... மேலும் பார்க்க

மதுரைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கரன், செயலா் சு.நடன க... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை அதலை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் முத்துகாா்த்திக் (27). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து அதலை கிராமத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

மயங்கி விழுந்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மேலவாசல் குடிசை வாரியத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சித்திரைவேல் (44). இவா், மதுரை மாநகராட்சி 68-ஆவது வாா்டு பகுதிய... மேலும் பார்க்க

தம்பதியா் தற்கொலை

மதுரை அருகே அரிசிக் கடை உரிமையாளரும், அவரது மனைவியும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனா். மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகேயுள்ள சித்தாக்கூா் நெல் களத்தில் இருவா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்க... மேலும் பார்க்க