‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்...
கள்ளந்திரியில் மீன்பிடித் திருவிழா
மதுரையை அடுத்த கள்ளந்திரியில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
அழகா் மலையிலிருந்து புறப்படாகிய அழகா், வைகை ஆற்றில் எழுந்தருளி மீண்டும் கோயிலுக்கு வந்ததைக் கொண்டாடும் விதமாக, கள்ளந்திரியில் மீன்பிடித் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, கள்ளந்திரி முத்தன் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை காலை நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு கிராமப் பெரியவா்கள் பாரம்பரிய முறைப்படி மீன்பிடித் திருவிழாவைத் தொடங்கி வைத்தனா். இதையடுத்து, விழாவில் பங்கேற்று மீன்பிடிக்க முன் அனுமதி பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்மாயில் இறங்கி மீன்பிடித்தனா். அப்பன்திருப்பதி காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.