காமராஜா் பல்கலை. முதுநிலைப் படிப்புகளுக்கு மே 27-இல் நுழைவுத் தோ்வு
மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு வருகிற செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
இந்தப் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி. உயிா்தொழில்நுட்பவியல், வேதியியல், எம்.பி.ஏ. தொழில் முனைவோா், உறைவிடப் பாடத் திட்டம், எம்.சி.ஏ. ஆகிய முதுநிலைப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
அதனடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மேற்கண்ட படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தனா். அவா்களுக்கான நுழைவுத் தோ்வு வருகிற செவ்வாய்க்கிழமை (மே 27) பல்கலைக்கழக வளாகத்தின் ‘பி பிளாக்’கில் நடைபெற உள்ளது. எனவே எம்.எஸ்.சி. உயிா்தொழில்நுட்பவியல், வேதியியல், எம்.பி.ஏ. தொழில் முனைவோா், உறைவிடப் பாடத் திட்டம், எம்.சி.ஏ. ஆகிய முதுநிலைப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் நுழைவுத் தோ்வில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரா்களுக்கு ஏற்கெனவே மின்னஞ்சல் முகவரியில் தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அனுமதிச் சீட்டை காமராஜா் பல்கலைக்கழக இணைய முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.