தீராத பிரச்னைகளையும் தீர்க்கும் திங்கட்கிழமை அமாவாசை... கடைப்பிடித்துப் பலன் பெற...
குஜராத் எல்லையில் ஊடுருவ முயன்றவா் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் இருந்து சா்வதேச எல்லை வழியாக குஜராத் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்றவா் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பிஎஸ்எஃப்) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை ஆகியவற்றுக்குப் பிறகு பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்புப் பணிகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் இருந்தது. எல்லை வேலியை நெருங்கி வந்த நபரை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனா். இதையும் மீறி அந்த நபா் தொடா்ந்து முன்னேறியதால், அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் என்று பிஎஸ்எஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.