செய்திகள் :

Thug Life: "இந்த படத்துல நீங்க யாருக்கு ஜோடினு கேட்கிறாங்க. நீங்க பார்த்தது 2 நிமிஷம்தான்!" - த்ரிஷா

post image

'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர்.

Thug Life Stills
Thug Life Stills

இன்றைய தினம் சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவை நடத்தி வருகின்றனர். படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.

இதில் த்ரிஷா பேசுகையில், "'நாயகன்' படத்துக்குப் பிறகு கமல் சாரும், மணி ரத்னம் சாரும் இணைந்து படம் பண்ணுறதுக்கு 37 வருஷம் காத்திருந்தேன். சில படங்கள் எனக்கு எப்போதும் ஸ்பெஷலா இருக்கும். அதுக்கு என்ன காரணம்னு தெரியல. கமல் சார் தொடர்ந்து 'நான் சினிமாவோட மாணவன்'னு சொல்றார். நான் அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டிருக்கேன். நான் இந்தப் படத்தோட கதாபாத்திரத்துக்கு பொருந்தியிருப்பேனானு எனக்கும் மணி சாருக்கும் தெரியல. சமீபத்திய பேட்டியில்கூட, குந்தவை கதாபாத்திரத்துக்கு நேரெதிரான கதாபாத்திரம்னு சொல்லியிருந்தார். ட்ரெய்லர் வந்ததும், 'நீங்க யாருக்கு ஜோடியா நடிச்சிருக்கீங்க?'னு கேட்கிறாங்க.

Trisha - Thug Life Audio Launch
Trisha - Thug Life Audio Launch

நீங்க பார்த்தது வெறும் ரெண்டு நிமிஷம்தான். ரெண்டு மணி நேரத்துக்குப் பிறகு படம் உங்களுக்கு முழுமையா புரியும். நான் இந்தப் படத்துல இல்லைன்னாலும், இன்னைக்கு ரஹ்மான் சாருக்காக வந்திருப்பேன்" என்றவர், ரசிகர்களை நோக்கி, "உயிர் எப்போதுமே உங்களுடையதுதான். எனக்கு இந்தப் படத்துல பிடிச்ச பாடல் 'முத்த மழை'தான். இந்தப் படத்துல என்னோட கதாபாத்திரம் சிங்கர்னு சொல்ல முடியாது. இசையை விரும்பக்கூடிய ஒருத்தியா இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும், இந்தப் படத்துல எல்லோருமே பாஸிடிவ்தான். ஆனா, எல்லோருக்குமே ஒரு க்ரே ஷேட் இருக்கும்," என்று கூறி முடித்தார்.

Thug Life: "கமல் சாரை மதிச்சுதான் போறோம்; மிதிச்சு போகல..!" - சிம்பு ஸ்பீச்!

'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். இன்றைய தினம் சென்னை சாய் ராம... மேலும் பார்க்க

Thug Life: "எனக்கு ரெட் கார்ட் கொடுத்தப்போ மணி சார்தான்..." - மேடையில் கண் கலங்கிய சிம்பு

'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். இன்றைய தினம் சென்னை சாய் ராம... மேலும் பார்க்க

Thug Life "கடல் படத்துக்கு வாய்ப்பு தேடினேன்; 14 வருஷம் கழிச்சு இன்னைக்கு.."- நெகிழும் அசோக் செல்வன்

'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். இன்றைய தினம் சென்னை சாய் ராம... மேலும் பார்க்க

Thug Life: "உன்கூட நான் கூடி நடித்திட, எனக்கு படம் ஒண்ணு போதுமா!" - மேடையில் கவிதைச் சொல்லிய அபிராமி

'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். ‘தக் லைஃப்’ படத்தில்...இன்றை... மேலும் பார்க்க

Parandhu Po: "ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால்..." - இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிற பறந்து போ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. மிர்ச்சி சிவா, அஞ்சலி, அஜு வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி... மேலும் பார்க்க

Soori: 'ஒரு ‘வியூ’க்காக தயவு செய்து இப்படி பண்ணாதீங்க...' - மக்களுக்கு சூரி வைத்த வேண்டுகோள் என்ன?

சூரி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'மாமன்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்க்க வேண்டாம் எனவும், நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்க... மேலும் பார்க்க