பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உண்டு: ஜெர்மனி
450 கிலோ வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் 450 கிலோ நாட்டு வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த வாரம் அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து மாவட்டம் முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு விற்பனையாளா்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா்.
இதையடுத்து பட்டுக்கோட்டை வட்டத்தில் வட்டாட்சியா் தா்மேந்திரா, துணை வட்டாட்சியா் ஷேக் உமா்ஷா, மதுக்கூா் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், மதுக்கூா் சரக வருவாய் ஆய்வாளா் கவுதமன், கீழக்குறிச்சி கிழக்கு விஏஓ ஆறுமுகம், கீழக்குறிச்சி மேற்கு விஏஓ வீரசோழன், கிராம உதவியாளா்கள் பத்மா, ரவிச்சந்திரன் ஆகியோா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அப்போது கீழக்குறிச்சி பகுதியில் ப. அம்பிகாபதி (45) என்பவரது வீட்டின் மாடி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிலோ நாட்டு வெடிகள், வெடிமருந்து பொருள்கள் ஆகியவற்றை மதுக்கூா் போலீஸாா் பறிமுதல் செய்து, அம்பிகாபதியை கைது செய்து விசாரிக்கின்றனா்.