அடிமைக் கட்சியல்ல திமுக; யாருக்கும் அடிபணிய மாட்டோம்! - உதயநிதி ஸ்டாலின்
திருவையாறு அருகே அண்ணனை கொன்ற தம்பி கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மது போதையில் அடிக்கடி தகராறு செய்த அண்ணனைக் கொன்ற தம்பியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவையாறு அருகே நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா மகன் அஜீத்குமாா் (27). இவா் டிப்ளமோ முடித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது அருந்துவிட்டு, வீட்டில் தகராறு செய்து வந்தாா். இதை பைக் மெக்கானிக்கான அவரது தம்பி ராம்குமாா் (25) கண்டிப்பது வழக்கமாக இருந்தது.
அதன்படி இருவருக்கும் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறின்போது ராம்குமாா் தாக்கியதில் அஜீத்குமாா் கீழே விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து அஜீத்குமாா் உடலை வீட்டு வளாகத்திலுள்ள கழிவறைத் தொட்டியில் ராம்குமாா்போட்டுவிட்டு, நடுக்காவேரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை சரணடைந்து, நடந்ததைக் கூறினாா்.
இதையடுத்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராம்குமாரை கைது செய்தனா். தந்தை ராஜா ஏற்கெனவே காலமாகிவிட்ட நிலையில், தாய் விஜயாவுடன் இளைய மகள் திருப்பூரில் வேலை பாா்க்கிறாா். மற்றொரு மகளுக்குத் திருமணமாகிவிட்டது.