சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்படுவது அவ்வளவு எளிதல்ல: அஜித் அகர்கர்
கோட்டா மாணவர்கள் தற்கொலை விவகாரம்: ராஜஸ்தான் துணை முதல்வர் என்ன சொல்கிறார்?
ராஜஸ்தான் கோட்டா நகரில் மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்வது பற்றி துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"ராஜஸ்தானில் மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்வது மிகவும் தீவிரமான பிரச்னை. இதுதொடர்பாக ராஜஸ்தான் அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பெற்றோர்கள் கல்வி தொடர்பாக தங்கள் குழந்தைகள் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல பயிற்சி மையங்களும், மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதற்காக பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இனி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல் பார்த்துக்கொள்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு அனைவரின் ஆதரவும் தேவை" என்று கூறியுள்ளார்.
கோட்டா தற்கொலை பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் அதிகம் இருக்கின்றன. நாடு முழுவதிலுமிருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சமீபமாக இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. இந்தாண்டு மட்டும் இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜஸ்தான் மாநில அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியது.
"கோட்டா நகரில் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது ஏன்? ஒரு மாநில அரசாக நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படுவதில்லை? மாணவர்களின் தற்கொலைக்கு என்னதான் காரணம்?" என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க | இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!