தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு! இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில்..!
நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத 4 முதல்வர்கள்! காரணம்?
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதால், கூட்டத்தில் பங்கேறகவில்லை என்று தகவல்கள் வெளியாகின. அடுத்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, உடல்நிலையைக் காரணம் காட்டி பங்கேற்கவில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கேரள மற்றும் பிகார் மாநில முதல்வர்களும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், இதற்கான காரணம் அறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.