செய்திகள் :

Gill : 'இந்திய அணியின் புதிய கேப்டன் கில்!' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிசிசிஐ!

post image

'தேர்வுக்குழு ஆலோசனை!'

ஜூனில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கே 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அணியின் சீனியர்கள் ஓய்வுபெற்ற பிறகு இந்திய அணி ஆடப்போகும் முதல் தொடர் இது. இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? இந்திய அணியின் புதிய ஓப்பனிங் கூட்டணி எது? விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் இறங்கப் போகும் புதிய வீரர் யார்? போன்ற கேள்விகள் எழுந்திருந்தது.

Ajit Agarkar
Ajit Agakar

இந்நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழு மும்பையில் பிசிசிஐயின் தலைமை அலுவலகத்தில் கூடி அலோசனை செய்தது. ஆலோசனையின் முடிவில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் பத்திரிகையாளர் சந்தித்திருந்தார்.

அப்போது பேசிய அவர், 'புதிய கேப்டனை அறிவிக்கும் போது, அடுத்த ஒரு தொடருக்கும் இரண்டு தொடருக்குமான கேப்டனை தேர்வு செய்ய முடியாது. நீண்ட கால அடிப்படையில்தான் யோசிக்க முடியும். அதன்படி,இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கில்லை அறிவிக்கிறோம். கில் இளம் வீரர். டி20 யிலும் கேப்டனாக நன்றாக செயல்பட்டிருக்கிறார்.

Gill
Gill

இது அதிக அழுத்தமிக்க பணிதான். ஆனாலும், எங்களின் தேர்வு சரியானதுதான் என கில் நிரூபிப்பார் என நம்புகிறோம். அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்தெல்லாம் கில்லும் கம்பீரும் இணைந்து முடிவெடுப்பார்கள்.' என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிஷப் பண்ட் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும், இந்திய அணியில் தமிழக வீரர்களான சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம்பிடித்திருக்கின்றனர்.

Ind vs Eng : 'பும்ராவுக்கு ஏன் கேப்டன் பதவி கொடுக்கவில்லை?' - அகர்கர் விளக்கம்!

ஜூனில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கே 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அணியின் சீனியர்கள் ஓய்வுபெற்ற பிறகு இந்திய அணி ஆடப்ப... மேலும் பார்க்க

RCB vs SRH : 'புதிய கேப்டனோடு களமிறங்கும் RCB!' - காரணம் என்ன?

'பெங்களூரு vs ஹைதராபாத்!'பெங்களூரு அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையேயான போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதருக்கு காயம் காரணமாக இந்தப் போட்டியில் கேப்டனாக செயல்பட... மேலும் பார்க்க

Virat Kohli : 'அது ஒரு அவமானம்...' - விராட் கோலியின் ஓய்வு குறித்து பென் ஸ்டோக்ஸ்!

'கோலி பற்றி பென் ஸ்டோக்ஸ்!'இந்திய அணியின் சூப்பர் சீனியர் வீரரான விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில், விராட் கோலியின் ஓய்வு குறித்து இங்கிலாந்து அணியின... மேலும் பார்க்க

IPL Playoffs : 'மும்பை வென்றால் Qualified; ஒருவேளை தோற்றால்? நாக்அவுட்டில் மோதும் மும்பை, டெல்லி!

'மும்பை vs டெல்லி!'மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி இன்று வான்கடேவில் நடக்கவிருக்கிறது. ப்ளே ஆப்ஸில் இன்னும் ஒரே ஒரு இடம்தான் மீதமிருக்கிறது. அந்த ஒரு இடத்துக... மேலும் பார்க்க