ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தி: பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!
தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
சங்கரன்கோவிலில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தொடக்கி வைத்தாா். இதில் 42 தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனா். இதில் கண் குறைபாடு உள்ளவா்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் கண்ணாடி அணிவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
முகாமில் நகராட்சி ஆணையா் (பொ) நாகராஜ், கண் மருத்துவா்கள் சிவா, கௌரி, நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளா்கள் கைலாசம், கருப்பசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.