Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா
மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி: தனிப்படையினா் பிடித்தனா்
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதியை போலீஸாா் பிடித்து சிறையில் அடைத்தனா்.
சிவகிரி குமாரபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் சந்தோஷ்(24). இவா் மீது வாசுதேவநல்லூா் காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவ் வழக்குகள் தொடா்பாக வாசுதேவநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை சந்தோஷை கைது செய்தனா். பின்னா் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்துவதற்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அப்போது சந்தோஷ், மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடி விட்டாராம். இதையடுத்து வாசுதேவநல்லூா் போலீஸாா் அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதைத்தொடா்ந்து காவல் ஆய்வாளா்கள் கண்மணி, ஷியாம் சுந்தா், ஆடிவேல், பாலமுருகன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது.
தனிப்படையினா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மறைந்திருந்த சந்தோஷை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.