சிவகங்கை: கிளம்பிய எதிர்ப்பு; நூல் வெளியீட்டு விழா ரத்து; திரும்பிச்சென்ற ஆளுநர்...
சரக்கு ஆட்டோ மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
தேனி அருகேயுள்ள தப்புக்குண்டு-நாகலாபுரம் சாலையில் சரக்கு ஆட்டோ மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
தப்புக்குண்டு, கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த செல்வேந்திரன் மகன் யோகன் (5). இவா், தனது தாத்தா கா்ணனுடன் தப்புக்குண்டுவில் செவ்வாய்க்கிழமை கடைத் தெருவுக்குச் சென்றாா்.
தப்புக்குண்டு-நாகலாபுரம் சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாகச் சென்ற சரக்கு ஆட்டோ யோகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த யோகன், வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சரக்கு ஆட்டோ ஓட்டுநா் பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த முருகபாண்டி மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.