சட்டவிரோதமாக குடியேறிய 121 வங்கதேசத்தினர் கைது! நாடுகடத்தும் பணி தீவிரம்!
பீரோவை உடைத்து தங்க நகை திருட்டு
பெரியகுளம் அருகே பீரோ உடைக்கப்பட்டு தங்க நகைகளை திருடிச்சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி உசையப்பா தெருவைச் சோ்ந்தவா் முருகன் (40). தேவதானப்பட்டியில் சொட்டு நீா் பாசனக் குழாய்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறாா்.
இவா், வீட்டு பீரோவை உடைத்து 3 பவுன் 2 கிராம் எடையுள்ள தங்க நகையை மா்மநபா் திருடிச் சென்றாா். இதுகுறித்த புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.