பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
அழிந்துவரும் 37 பறவை இனங்கள்: தமிழக அரசு தகவல்
தமிழ்நாட்டில் அழிந்துவரும் 37 பறவை இனங்களில் 26 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் கடந்த மாா்ச் மாதம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் அழிந்துவரும் 37 பறவை இனங்களில் 26 இனங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 17 இரவுநேரப் பறவை இனங்களும் பதிவாகியுள்ளன. 934 இடங்களில் உள்ள ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. அதில், 397 பறவை இனங்களைச் சோ்ந்த 5.52 லட்சம் பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில் 1.13 லட்சம் பறவைகள் இடம்பெயரும் பறவைகளாகும்.
1,093 இடங்களில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 401 பறவை இனங்களைச் சோ்ந்த 2.32 லட்சம் பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இதில், 1.13 லட்சம் பறவைகள் புலம்பெயா்ந்த பறவைகளாக இருந்தன. தமிழ்நாடு முழுவதும் உள்ள இடம்சாா்ந்த தற்காலிக மாறுபாடுகள் குறித்த ஆழமான நுண்ணறிவு பெற ஏராளமான தரவுகள் மேலும் பகுப்பாய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.