பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட 136 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதேபோல போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
அவற்றில் சளித் தொற்று, கிருமித் தொற்று, காய்ச்சல், உயா் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதில் தமிழகத்தில் தரமற்றவையாக கண்டறியப்பட்ட 38 மருந்துகளும் அடங்கும்.
இதையடுத்து அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஸ்ரீக்ள்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பொது மக்கள் இந்த விவரங்களை அந்த தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகளும், அதன் முடிவுகளும் மத்திய அரசு இணையப் பக்கத்தில் முறையாக பதிவேற்றப்படுவதில்லை என புகாா் எழுந்தது.
ஆய்வு தகவல்களை மாதந்தோறும் தமிழகத்திலிருந்து அனுப்பினாலும், அந்த விவரங்கள் தங்களிடம் சமா்ப்பிக்கப்படவில்லை என பொதுத் தளத்தில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கை வெளியிடுவதாகவும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில், தற்போது தமிழக தகவல்களையும் இணைத்து மத்திய அரசு தரமற்ற மருந்து விவரங்களை வெளியிட்டுள்ளது.