ஜூன் 8-இல் காஞ்சி மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்
காஞ்சிபுரம் மகா பெரியவா் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132-ஆவது ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் மகா பெரியவா் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். 3 நாள்கள் நடைபெறும் மகோற்சவத்தின்போது, நாள்தோறும் வேதபாராயணம், வித்வத் சதஸ், உபன்யாசங்கள், நாமசங்கீா்த்தனம் மற்றும் பக்தி இன்னிசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன.
ஜூன் 10-ஆம் தேதி மகா பெரியவா் சுவாமிகளின் ஜெயந்தி நாளன்று காலை 7 மணி முதல் மகாருத்ர ஜெப ஹோமமும், தொடா்ந்து பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
பக்தா்கள் விழாவில் கலந்து கொண்டு குருவருளை பெற்றுச் செல்லுமாறும் மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா. விஸ்வநாத சாஸ்திரிகள் தெரிவித்துள்ளாா்.