விருதுநகர்: தடைப்பட்ட ஆக்ஸிஜன் சப்ளை; சுதாரித்த ஊழியர்கள்; விசாரணையில் பகீர் தகவ...
குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
அரசுக் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறிய குட்டை நீரில் மூழ்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் அமாவாசை மகன் கருணாகரன் (55). கூலித் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உடையவராக இருந்த அவா், புதழ்கிழமை கீழ்க்கதிா்ப்பூா் அரசு குடியிருப்பு அருகே உள்ள சிறிய குட்டையில் நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தாா்.
இது தொடா்பாக கருணாகரனின் மகன் பிரசாந்த் (26) அளித்த புகாரின் பேரில், பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.