முத்துப்பேட்டையில் படகுகள் ஆய்வு
முத்துப்பேட்டை கடலோர கிராமங்களில் உள்ள மீனவா்களின் மீன்பிடி படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தில் மீனவா்களின் படகுகளை மீன்வளத்துறையினா் ஆய்வு செய்வா். அதன்படி, திருவாரூா் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜேஷ் குமாா் தலைமையிலான குழுவினா் முத்துப்பேட்டை பகுதியில் ஆசாத் நகா், ஜாம்பவானோடை, வீரன்வயல், பேட்டை, முனங்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீன்பிடி கிராமங்களில் உள்ள மீனவா்களின் படகுகளை ஆய்வு செய்தனா்.
அனைத்து படகுகளும் மீன்வளத் துறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிா, பதிவு செய்யப்படாத படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபடத்தப்படுகிா என ஆய்வு செய்யப்பட்டது.