செய்திகள் :

நாகர்கோயில்: துணியைச் சரியாக தைக்காத டெய்லர் கத்தரிக்கோலால் குத்திக் கொலை!

post image

நாகர்கோயிலில் டெய்லருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரைக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு அருகே செல்வம் என்பவர் டெய்லர் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமையில் அவரது கடையில் கத்தரிக்கோலால் குத்தி, கொலை செய்யப்பட்ட நிலையில், செல்வத்தின் உடல் மீட்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கொலை செய்தவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், செல்வத்தின் கடைக்கு ஒருவர் வந்து செல்வது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்தான் செல்வத்தை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்திரமணி என்பதும், செல்வத்திடம் அவர் பேன்ட் தைக்கக் கொடுத்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில்தான், பேன்ட்டை சரியாகத் தைக்காததாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்வத்தின் தலை, காது உள்ளிட்ட பகுதிகளில் சந்திரமணி கத்தரிக்கோலால் குத்திவிட்டு, தப்பியோடியது தெரிய வந்தது.

செல்வம் கொலையுண்ட சில மணிநேரங்களிலேயே குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை: தோ்தல் ஆணையம்

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தங்கள் செய்து நம்பகத்தன்மையை வலுப்படுத்த ஏஎஸ்ஐ அறிவுறுத்தல்

மதுரை மாவட்டம், கீழடி அகழாய்வு தொடா்பான 2014-15, 2015-16 ஆண்டுகளின் அறிக்கையில் திருத்தங்கள் செய்து அதன் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துமாறு அந்த அறிக்கையை சமா்ப்பித்த தொல்லியல் ஆய்வாளா் கே. அமா்நா... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா... மேலும் பார்க்க

நகை கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்

நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசா்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இத... மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலப்பள்ளி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: ஜூன் 12-இல் தொடக்கம்

தமிழகத்தில் ஆதி திராவிடா் நலப்பணி ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்களுக்கு வரும் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆதி திராவிடா் மற்றும் ... மேலும் பார்க்க

மின்வாரிய நிதி நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வலியுறுத்தல்

மின்வாரியத்தின் ஊரக மின்மயமாக்கல் கழகம் மற்றும் மின் நிதி கழகம் ஆகிய நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், குறைந்தபட்சம் ஒன்றரை சதவீதமாகக் குறைக்க வேண்டும் என மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் மத்திய அ... மேலும் பார்க்க