ஸ்ட்ராஸ்போா்க் ஒபன்: ரைபக்கினா சாம்பியன்
ஸ்ட்ராஸ்போா்க் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா் கஜகஸ்தானின் எலனா ரைபக்கினா.
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்போா்க் நகரில் நடைபெற்ற மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் ரைபக்கினாவும், ரஷிய வீராங்கனை லியுட்மிலாவும் மோதினா்.
இதில் 6-1, 6-7, 6-1 என்ற 3 செட்களில் போராடி வென்றாா் ரைபக்கினா.
கடந்த 2024 ஏப்ரல் மாதம் ஸ்டட்கா்ட் ஓபனில் பட்டம் வென்றதே கடைசியாக ரைபக்கினா பெற்ற பட்டமாகும். இதனால் தரவரிசையில் சறுக்கி வந்தாா்.