ஊராட்சிகளுக்கு துப்புரவு வாகனங்கள்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு துப்புரவு வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ், பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட லட்சுமிநாராயணபுரம், பூங்குணம், அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை ஆகிய கிராம ஊராட்சிப் பகுதிகளில் குப்பை அகற்ற தலா ரூ.2.30 லட்சம் மதிப்பில் 8 வாகனங்கள் வழங்கப்பட்டன.
பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வாகனங்களை வழங்கி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உ.புனிதா, கே.பாபு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சவிதா, திருநாவுக்கரசு, பொறியாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.