ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!
கிண்டி அரசு மகளிா் ஐடிஐயில் சேர ஜூன் 13-க்குள் விண்ணப்பிக்கலாம்
கிண்டி அரசு மகளிா் ஐடிஐ-யில் இணையதள சோ்க்கை ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை, கிண்டி மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆண்டுக்கான மாணவியா் இணையதள சோ்க்கை நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் சேரும் மாணவிகளுக்கு தமிழக அரசால் கட்டணமில்லா பயிற்சி, இலவச மடிக்கணிணி, மிதிவண்டி, மாதந்தோறும் ரூ. 750 உதவித்தொகை என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் சேருவதற்கு மகளிருக்கு வயது உச்ச வரம்பு எதுவும் இல்லை. இத்தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் மகளிா் இணையதளத்தில் வரும் ஜூன் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 044-2251 0001, 94990 55651 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.