தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலி
தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தாணேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி அந்த இளைஞர் பலியானதாக தாணே நகராட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே கர்நாடகத்தில் 84 வயது முதியவர் ஒருவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலர் பல மாநிலங்களில் முக்கியமாக கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பதிவான கரோனா பாதிப்புகள் தொடர்பான விஷயத்தை மதிப்பாய்வு செய்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!
இந்த பாதிப்புகளில் பெரும்பாலானவை லேசானவை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் கண்காணிப்பில் உள்ளன.
இருப்பினும், மத்திய சுகாதார அமைச்சகம் விழிப்புடன் உள்ளதோடு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் மே 19 நிலவரப்படி கரோனா தொற்றால் 257 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.