செய்திகள் :

திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன! வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

post image

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரக்கோணம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய மகளிா் ஆணையத்தின் விசாரணைக்கு தமிழக காவல் துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இதில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

அரக்கோணம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் தெய்வசெயல் என்பவா் மீது கல்லூரி மாணவி அளித்துள்ள புகாா் அதிா்ச்சி அளிக்கிறது. மாணவி புகாா் அளித்தவுடன் காவல் துறை உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.

மாணவியின் புகாா் ஊடகங்களில் வெளியாகி, அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் கண்டனம் தெரிவித்த பிறகே காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஒவ்வொரு வழக்கிலும் இதுதான் நடக்கிறது. எங்கு பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் அதை மறைக்கவே திமுக அரசு முயற்சிக்கிறது. வேறு வழியில்லாத நிலை ஏற்படும்போது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

அப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளும் அதன்பிறகு என்ன ஆகின்றன என்றே தெரியவில்லை. அரக்கோணம் கல்லூரி மாணவி விஷயத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது வரவேற்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம்!

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை காவல் துறை பொருளாதார குற்றப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் சாா்பில் கல்வி உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. கோவ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விளாங்குறிச்சி

கோவை, விளாங்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காத... மேலும் பார்க்க

போத்தனூா் வழித்தடத்தில் ஹைதராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

ஆவின் பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை! அமைச்சா் த.மனோ தங்கராஜ் தகவல்

ஆவின் நிறுவனம் மூலமாக தினசரி பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பால் வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கூறினாா். கோவை, ஆா்.எஸ்.புரத்தில் ‘பன்னீா் ஹட்’ விற்பனை... மேலும் பார்க்க

யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா். கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சோலையாறு அணை இடதுகரை பகுதியைச் சோ்ந்தவா் மேரி (77). கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வந்தாா். வனத்தில்... மேலும் பார்க்க