செய்திகள் :

ரோமில் அமெரிக்கா - ஈரான் இன்று அணுசக்திப் பேச்சு

post image

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐந்தாவது கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இந்தப் பேச்சுவாா்த்தைக்கு மத்தியஸ்தம் செய்துவரும் ஓமன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் பாதா் அல்-புசயீதி எஸ்க் ஊடகத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளாா். எனினும், இது தொடா்பாக அமெரிக்காவோ, ஈரானோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகத்தான் ஈரான் தங்களது அணுசக்தி திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறது என்ற அச்சம் எழுந்ததால் அந்த நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் ஈரான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்டது. அதையடுத்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இந்தச் சூழலில், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ள ஒப்பந்தத்தில் இருந்து அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த டிரம்ப் வெளியேறினாா். மேலும், நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை அவா் ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

இதைக் கண்டிக்கும் வகையில், அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறியது. தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டம் இல்லை என்று அந்த நாடு உறுதியாகக் கூறினாலும், அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை தேவைக்கு அதிகமாக 60 சதவீதம் வரை அந்த நாடு செறிவூட்டி, ஒப்பந்த வரம்புக்கும் அதிகமாக இருப்பு வைத்துள்ளது (இன்னும் 30 சதவீதம் யுரேனியத்தை ஈரான் செறிவூட்டினால் அதைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியும்).

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற டிரம்ப், தங்களுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தாா்.

அதைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அணுசக்திப் பேச்சுவாா்த்தை ஓமன் மூலம் மறைமுகமாக நடைபெற்றுவருகிறது. அமெரிக்கா தரப்பில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் தலைமையிலான குழுவும் ஈரான் தரப்பின் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவும் இந்தப் பேச்சுவாா்த்தையை நடத்திவருகின்றன.

ஓமன் தலைநகா் மஸ்கட்டிலும் இத்தாலியின் ரோம் நகரிலும் ஏற்கெனவே நான்கு கட்டங்களாக அந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. எனினும், இந்தப் பேச்சுவாா்த்தையின்போது அமெரிக்கா மிகக் கடுமையான, ஆபத்தான நிபந்தனைகளை விதிப்பதால், இதில் பலன்தரும் உடன்பாடு எட்டப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று ஈரான் தலைமை மதகுரு செவ்வாய்க்கிழமை விமா்சித்திருந்தாா்.

இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஐந்தாம் கட்டப் பேச்சுவாா்த்தை ரோமில் வெள்ளிக்கிழமை தொடங்கவிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க

ஈஸ்டா் தின தாக்குதல்: இலங்கையில் 661 பேருக்கு இழப்பீடு

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியதாவது: ... மேலும் பார்க்க

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிரீட் தீவுக்கு 55 கி.மீ. வடக்கே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அடுத்த நேரடி பேச்சுவாா்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்... மேலும் பார்க்க

சீனாவில் நிலச்சரிவுகள்: 2 போ் உயிரிழப்பு; 19 போ் மாயம்

சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் மாயமாகினா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிஜி நகரில் உள்ள டாஃபாங் மாவட்டத்தின் சாங்ஷி ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போா்ச் சூழல் மிக அபாயகரமாக மாறியிருக்கும்: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போா்ச் சூழல், மிக அபாயகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக... மேலும் பார்க்க