பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
சீனாவில் நிலச்சரிவுகள்: 2 போ் உயிரிழப்பு; 19 போ் மாயம்
சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் மாயமாகினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பிஜி நகரில் உள்ள டாஃபாங் மாவட்டத்தின் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் தனித்தனியாக இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சாங்ஷியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 போ் உயிரிழந்தனா், குவோவா நகராட்சியில் 19 போ் மாயமாகியுள்ளனா்.
தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு இரு சம்பவப் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது (படம்) என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள நிலவியல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மேலும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உள்ளூா் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.