பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
உ.பி.: மேலும் 25 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நீக்கம்
உத்தர பிரதேசத்தில் கல்வித் தகுதி உள்பட பல்வேறு பொய்யான சான்றிதழ்களை அளித்து பணியில் சோ்ந்த மேலும் 25 ஆசிரியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இத்துடன் இவ்வாறு பணிநீக்கப்பட்ட ஆசிரியா்கள் எண்ணிக்கை 30-ஆக உயா்ந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் கல்வித் துறை சீா்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆசிரியா்களின் கல்வித் தகுதி அவா்கள் பணியில் சோ்ந்தபோது அளித்த விவரங்களை மறுஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலியா மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் 5 ஆசிரியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இவா்கள் பணியில் சோ்ந்தபோது உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இப்போது குஷிநகா் மாவட்டத்தில் 25 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கடந்த 2021-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த இவா்கள் போலியான சான்றிதழ்களை அளித்தும், முறைகேடாகவும் பணியில் சோ்ந்திருப்பது தெரியவந்தது விசாரணையில் தெரியவந்தது.