செய்திகள் :

Golden Dome: ``61 பில்லியன் டாலர் தர வேண்டாம்'' - ட்ரம்ப் அழைப்பு; அமெரிக்கா உடன் இணையுமா கனடா?

post image

'கோல்டன் டோம்' - அமெரிக்காவை பாதுகாக்க 175 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் புதிய ராணுவக் கட்டமைப்பு இது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.

இந்த கோல்டன் டோம் கப்பல் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் என எந்த ஏவுகணையாக இருந்தாலும், அதுவும் அவை சாதாரணமானது அல்லது அணு ஆயுதம் என எதுவாக இருந்தாலும் தோற்கடிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் இந்தக் கட்டமைப்பு. மேலும், அமெரிக்காவை விண்வெளியில் இருந்து தாக்கினால் கூட இந்தக் கட்டமைப்பு தடுத்துவிடும் ஆற்றலைக் கொண்டது.

இந்தக் கட்டமைப்பில் தாங்களும் இணைந்துகொள்ள கனடா விருப்பம் தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் முன்னர் தெரிவித்திருந்தார்.

கனடா தேசியக் கொடி
கனடா தேசியக் கொடி

இந்த நிலையில், நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது...

"பிரமாண்டமான கோல்டன் டோம் கட்டமைப்பு உருவாக்கத்தில் பங்குகொள்ள கனடா விருப்பம் தெரிவித்துள்ளது. இதில் அவர்கள் சேர 61 பில்லியன் டாலர்களை தர வேண்டியதாக இருக்கும். ஆனால், அவர்கள் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைந்தால், அவர்கள் எந்த டாலரையும் தர வேண்டாம். அவர்கள் இந்த ஆஃபர் குறித்து யோசித்து வருகிறார்கள்".

அமெரிக்கா உடன் இணையமாட்டோம் என்று கனடா மிக உறுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்தப் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாஜகவா, காங்கிரஸா.. சசி தரூர் எந்தக் கட்சியில் இருக்கிறார்? - அதிருப்தியில் காங்கிரஸ் | Explained

சசி தரூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரா... பாஜக கட்சியைச் சேர்ந்தவரா என்பது சில நாள்களாகக் குழப்பமாக இருக்கிறது. அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி சசி தரூருக்கு எதிராகவும், பாஜக கட்சி சசி தரூருக்கு ஆதாரவ... மேலும் பார்க்க

``தாராவி மக்களுக்கு 2 கழிவறையுடன் 350 சதுர அடியில் வீடு'' - முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல்

மும்பை தாராவியில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடிசைகளை இடித்துவிட்டு அந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் நீண்ட இழுபறிக்கு பிறகு தீவிரம் அடைந்திருக்கிறது. மாநில அரசு இத்திட்டத்தை செ... மேலும் பார்க்க

US Tariffs: `ட்ரம்ப் அதிகாரத்தை மீறுகிறார்' நீதிமன்றம் குட்டு; `இது அரசு முடிவு' -ட்ரம்ப் முரண்டு

'பரஸ்பர வரி' என்று உலகில் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் மீதும் இறக்குமதி வரியை விதித்து அதிர்ச்சியை தந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது அதிர்ச்சியோடு மட்டும் நின்றுவிடாமல், அறிவிக்கப்பட்ட ஒ... மேலும் பார்க்க

DOGE-ல் இருந்து விலகும் எலான் மஸ்க்; ட்ரம்ப் - மஸ்க் மனக்கசப்பு காரணமா?

எதிரும் புதிருமாய் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், கடந்த ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது கைக்கோர்த்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ட்ரம... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருவருக்கு தவறுதலாக வேறு க்ரூப் ரத்தம் ஏற்றினால் உயிரிழப்பு ஏற்படுமா?

Doctor Vikatan: ராஜஸ்தானைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு, ரத்த வகையை மாற்றிச் செலுத்தியதால் அவரும்அவரின் கருவிலிருந்த குழந்தையும் உயிரிழந்ததாக சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன். ரத்தப் பிரிவை மாற்றி ஏற்றி... மேலும் பார்க்க