செய்திகள் :

``தாராவி மக்களுக்கு 2 கழிவறையுடன் 350 சதுர அடியில் வீடு'' - முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல்

post image

மும்பை தாராவியில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடிசைகளை இடித்துவிட்டு அந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் நீண்ட இழுபறிக்கு பிறகு தீவிரம் அடைந்திருக்கிறது.

மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்தும் பணியை அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்து இருக்கிறது. தாராவி திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வரக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் வீடு கொடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பட்னாவிஸ்

ஆனால் வீடு பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிக்கு முன்பு வரை தாராவியில் குடிசை கட்டி வசிப்பவர்களுக்கு 350 சதுர அடியில் இலவச வீடு வழங்கப்படும். ஆனால் அதன் பிறகு கட்டப்பட்ட குடிசைகள் மற்றும், மாலாக்கள் எனப்படும் மாடியில் வசிப்பவர்களுக்கும் வீடு கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வந்தது.

இதையடுத்து 2022ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதிக்கு முன்பு வரையிலான குடிசைகள் மற்றும் மாடி வீடுகளுக்கும் வாடகை வீடு திட்டத்தில் வீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற மின் கட்டண ரசீது, விற்பனை ஒப்பந்த நகல், ஆதார் கார்டு, கீழ் தளத்தில் வசிப்பவர்களிடைருந்து பெறப்பட்ட பிரமாணபத்திரம் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாராவி குடிசைவாசிகளிடம் இருக்கும் ஆவணங்களை சரிபார்க்கும் பணி முழுவேகத்தில் நடந்து வருகிறது. இது வரை 55 ஆயிரம் குடிசைகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டுள்ளது.

தாராவியில் இன்னும் சில இடங்களில் கணக்கெடுப்பு நடத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தாராவி கும்பர்வாடாவில் இருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களது பகுதியில் கணக்கெடுப்பு நடத்த இது வரை அனுமதிக்கவில்லை.

தாராவி குடிசை

மாஸ்டர் பிளான்

தாராவியில் ஒரு புறம் குடிசைகள் கணக்கெடுப்பு, ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடந்தாலும் மற்றொரு புறம் தாராவியில் செயல்படுத்தப்பட இருக்கும் மாஸ்டர் பிளான் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை தாராவி மறுசீரமைப்பு திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.வி.ஆர். ஸ்ரீனிவாஸ் தாக்கல் செய்தார். இதில் துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் கலந்து கொண்டார்.

இதனை பெற்றுக்கொண்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''வீடு பெற தகுதிகள் மாறுபட்டு இருந்தாலும், இந்த திட்டத்தில் தாராவி பூர்வீக குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். தாராவியின் வணிக அடையாளத்தையும் அதன் தனித்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் .

இதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தேவையான ஒருங்கிணைப்பை வழங்கவேண்டும். உள்ளூர் மக்களின் நம்பிக்கை பெற்று அவர்களின் உணர்வுகளை பாதுகாப்பதன் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று அவர் கூறினார். தாராவி மாஸ்டர் பிளானை ஆய்வு செய்த முதல்வர் தலைமையிலான குழு அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்

இதன் படி தாராவியில் இலவச வீடு பெறும் மக்களுக்கு இரண்டு கழிவறை வசதியுடன் கூடிய 350 சதுர அடி வீடு வழங்கப்படும்.

தாராவியில் மொத்தம் 600 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 296 ஏக்கர் நிலம் மட்டும் குடிசை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தாராவியில் உள்ள நிலத்தில் 60 சதவீத நிலம் மும்பை மாநகராட்சிக்கு சொந்தமாகும்.

வழக்கமாக குடிசை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பில்டர்கள் நிலத்தின் மதிப்பில் 25 சதவீத தொகையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.

ஆனால் தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டத்தில் அரசுக்கு செலுத்தவேண்டிய அனைத்து கட்டணத்தையும் அரசு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் மும்பை மாநகராட்சியிடம் இருக்கும் நிலத்தின் மூலம் மாநகராட்சிக்கு எந்த வித வருவாயும் கிடைக்காது. இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கு தாராவிக்கு வெளியில் வீடு கட்டிக்கொடுக்கப்பட இருக்கிறது.

``குடும்ப அரசியல் என்று எதிர்த்தீர்களே? இப்போது..'' - செய்தியாளர் கேள்விக்கு கமலின் ரியாக்ஷன் என்ன?

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "முதல்வரை சந்தித்து நன்றி... மேலும் பார்க்க

``பாகிஸ்தானின் 81% ராணுவ தளவாடங்கள் சீனா உடையது தான்!'' - சசி தரூர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க, இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் இப்போது வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. அதில் நேற்று சசி தரூர் கொலம்பியாவிற்க... மேலும் பார்க்க

`கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை' - கிளம்பிய சர்ச்சையும், விளக்கமும்!

அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி குறித்த தனது ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கடந்த வாரம் திருப்பி அனுப்ப... மேலும் பார்க்க

US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்-க்கு வெற்றியா?

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, பெரும்பாலான உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை விதித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த நாளுக்கு 'விடுதலை நாள்' என்றும் பெயர் வைத்தார். 'பிற உலக நாடுகள் அமெரிக்காவின் ம... மேலும் பார்க்க

USA: `சீன மாணவர்களுக்கு ஸ்பெஷல் கண்டிஷன்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் வைக்கும் செக்!

அமெரிக்காவில் படிப்பு... அமெரிக்காவில் வேலை என்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள இளைஞர்களின் கனவு. ஆனால், இனி அது அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு காரணம், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்'.அ... மேலும் பார்க்க

`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா பரபரப்பு புகார்!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்குள் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து சலசலப்பு எழுந்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரம், 'நான் என்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதம... மேலும் பார்க்க