செய்திகள் :

துடரும் பட வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்: முதல் படத்திலேயே அசத்திய பிரகாஷ் வர்மா!

post image

துடரும் படத்தின் வில்லன் பிரகாஷ் வர்மாவை (52) ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரையில் வெளியானது.

ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமான பிரகாஷ் வர்மா படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுவருகிறார்.

இந்தப் படம் இன்று (மே.30) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது, ரசிகர்கள் மீண்டும் பிரகாஷ் வர்மாவின் நடிப்பை மிகவும் புகழ்ந்து வருகிறார்கள்.

யார் இந்த பிரகாஷ் வர்மா?

மக்களிடம் கவனத்தை ஈர்த்த ஓடோஃபோனின் ஜூஜூஸ், பிஸ்லேரி, கிட் கேட் போன்ற விளம்பரங்களை இவர் இயக்கியுள்ளார்.

பிரபல மலையாள இயக்குநர் ஏ.கே.லோகிததாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தயாரிப்பாளராக இருந்துவரும் இவர் அமெரிக்க இயக்குநருக்காகவும் ஒரு விளம்பரத்தை இயக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

இறுதிக்கட்டத்தில் சூர்யா - 45 படப்பிடிப்பு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் அவரது 45-வது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கடட்த்தை எட்டியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்த... மேலும் பார்க்க

மதராஸி படப்பிடிப்பு நிறைவு!

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட்... மேலும் பார்க்க

நானும் அம்மாவும் பெருமையடைகிறோம்... மகனை வாழ்த்திய தனுஷ்!

தன் மகன் உயர்கல்வியை முடித்ததற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர் படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா, இட்லி கடை படங்கள் அ... மேலும் பார்க்க

முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக்கை பிஎஸ்ஜி வெல்லுமா? எகிறும் எதிர்பார்ப்புகள்!

பிஎஸ்ஜி - இன்டர் மிலன் மோதும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் 36 அணிகள் மோதி, தற... மேலும் பார்க்க

ஆசிய தடகளப் போட்டியில் தமிழ்ப் பெண் வெற்றி!

ஆசிய தடகளப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.தென்கொரியாவில் நடைபெறும் 26-வது ஆசிய தடகளப் போட்டியில், 4x100 தொடர் ஓட்டத்தில், இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.தமிழ்நாடு வீரங்கனை அப... மேலும் பார்க்க

நடிகர் கமலுடன் முத்தக்காட்சி... அபிராமி விளக்கம்!

நடிகர் கமல் ஹாசனுடன் முத்தக்காட்சியில் நடித்தது குறித்து அபிராமி விளக்கமளித்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ... மேலும் பார்க்க