ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ல் அறிவிக்கப்படும்: நீதிபதி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையில் ஞானசேகரனுக்கு திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வழக்குகளிலும் ஞானசேகரனை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஞானசேகரனின் கூட்டாளிகள் சென்னை ஆலந்தூரைச் சோ்ந்த குணால் சேட், பொள்ளாச்சியைச் சேர்ந்த முரளிதரன் ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சிறப்புப் புலனாய்வு அமைப்பால் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சோ்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட 13 சாட்சிகளிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தி முடித்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிராக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் சென்னை மகளிர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சென்னை மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறை கேட்டுள்ள நிலையில், எனக்கு அம்மா மட்டுமே, அப்பா இல்லை. தொழில் பாதிக்கும் என்பதால் குறைந்தபட்ச தண்டநை வழங்க வேண்டும் என ஞானசேகன் நீதிபதி கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவுகள் உள்ளனவா என நீதிபதி ராஜலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.