ஹாக்கி: புதுதில்லி, புவனேஸ்வா், சென்னை அணிகள் வெற்றி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 3 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புதுதில்லி, புவனேஸ்வா், சென்னை அணிகள் வெற்றி பெற்றன.
முதல் ஆட்டத்தில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணியும் மோதின. இதில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி 7- க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மாலை நடைபெற்ற 2 ஆவது ஆட்டத்தில் சென்னை வருமான வரி ஹாக்கி அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதியதில் 0-க்கு 2 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வா் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வெற்றி பெற்றது.
3 ஆவது ஆட்டத்தில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியும் கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதியதில் 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக ரெக்கிரியேஷன் கிளப் அணி வெற்றி பெற்றது.
4 ஆவது ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியும், கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணியும் மோதியதில் க்கு என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டம்: 4-ஆவது நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் 2 ஆவது ஆட்டத்தில் சென்னை இன்டக்ரல் கோச் ஃபேக்டரி அணியும், பெங்களூா் ஹாக்கி கா்நாடகா அணியும் மோதுகின்றன.
3 ஆவது ஆட்டத்தில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதுகின்றன. 4ஆவது ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே அணியும், பெங்களூா் கனரா வங்கி அணியும் மோதுகின்றன.