பாகிஸ்தானின் வறுமைக்கு காரணம் வரி விதிப்பு முறை, கல்வி புறக்கணிப்பு: உலக வங்கி அ...
சூறைக்காற்றால் வாழைகள் சேதம்: கன்னியாகுமரி ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில், சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
தோவாளை வட்டம், ஞாலம் ஊராட்சிப் பகுதிகளில் பல ஏக்கா் நிலப்பரப்பிலான தோட்டத்தில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தோவாளை வட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில், ஏராளமான வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. அவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்தாா். மேலும் சேத விவரங்களை கணக்கெடுக்கும்படி அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அதைனைத் தொடா்ந்து தாழக்குடியில் மரம் முறிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்ததில், அந்த வீடு சேதமடைந்திருந்தது. அதையும் பாா்வையிட்ட ஆட்சியா், மரக்கிளையை உடனடியாக அகற்றுமாறு தீயணைப்புத் துறையினரிடம் அறிவுறுத்தினாா்.
மேலும், மழையால் சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுத்து, நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த் துறையினரிடம் அறிவுறுத்தினாா்.
பின்னா், செண்பகராமன்புதூா் ஊராட்சிப் பகுதிக்குச் சென்ற ஆட்சியா், அங்கு சூறைக்காற்றால் மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்ததை ஆய்வு செய்து புதிய மின் கம்பங்களை அமைத்து மக்களுக்கு விரைந்து மின்சாரம் வழங்கிட மின்வாரிய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகுமாா், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன், கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், தாழக்குடி பேரூராட்சித் தலைவா் சிவகுமாா், முன்னாள் தலைவி ரோகிணி ஐயப்பன், பேரூராட்சி உறுப்பினா் ரவிபிள்ளை, கிராம நிா்வாக அலுவலா் பாத்திமா, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

