கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
பட்டணங்கால் கருங்கல் கிளைக் கால்வாயை தூா்வார கோரிக்கை
பேச்சிப்பாறை பட்டணங்கால் கருங்கல் கிளைக் கால்வாயில் முறையாக தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இக்கால்வாய் முள்ளங்கனா விளையில் தொடங்கி திப் பிரமலை, பாலூா், பூட்டேற்றி. தெருவுக்கடை கீழ் மிடாலம் வழியாக இனயம் கடலில் செல்கிறது.
தற்போது, இக்கால்வாயின் பல்வேறு பகுதிகளில் புல், புதா்கள் ஏற்பட்டு தூா்ந்து காணப்படுகிறது. இதனால், கடைவரம்பு பகுதிகள் வரை முறையாக தண்ணீா் செல்லாமல் தென்னை மற்றும் வாழை விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் அவதியடைந்துள்ளனா்.
எனவே, இப்பகுதிகளில் முறையாக தூா் வார மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.