Health: ``நாம் ஏன் வனஸ்பதி சாப்பிடவே கூடாது?'' - எச்சரிக்கும் சித்த மருத்துவர்
புதுக்கடை அருகே மழையால் மரம் சாய்ந்து மின்கம்பம் சேதம்
புதுக்கடை அருகேயுள்ள வரிக்கவிளை பகுதியில் மழையில் மரம் சாய்ந்து மின் கம்பம் சேதமடைந்தது. இதனால் , அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் வரிக்கவிளை பகுதியில் சாலையோர மின்கம்பத்தின் மீது மரம் சாய்ந்து விமுந்தது.
இதில் மின் கம்பம் சேதமடைந்ததால், வரிக்கவிளை சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. புதுக்கடை மின்வாரிய அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி சீரமைத்தனா்.