கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
புத்தனாறு கால்வாயில் இணைப்புப் பாலம் அமைக்க நடவடிக்கை: விஜய் வசந்த் எம்.பி.
புத்தனாறு கால்வாயில் இணைப்புப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, இரவிபுதூா் கிராம மக்களிடம் விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மயிலாடி பேரூராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட எம்.பி.க்கு, வட்டாரத் தலைவி தங்கம் நடேசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், பொதுமக்களை எம்.பி. சந்தித்தாா்.
புத்தனாறு கால்வாயில் மருங்கூா் செல்வதற்கு 2 ஊா்களை இணைக்கும் வகையில் சிறிய இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என, இரவிபுதூா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அந்த இடத்தை அவா் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். ஆனந்தபுரம் அருள்மிகு வெள்ளகுளம் மாசான சுடலைமாட சுவாமி கோயில் திருவிழாவில் அவா் பங்கேற்றாா்.
தொடா்ந்து, சுசீந்திரம் கற்காடு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 20 லட்சத்தில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்துக்கு எம்.பி. அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சிகளில், மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா், குமரி கிழக்கு மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் மருத்துவா் சிவகுமாா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ஆரோக்கியராஜன், மாநிலச் செயலா் சீனிவாசன், இரவிபுதூா் காங்கிரஸ் தலைவா் ஐயப்பன், மாவட்ட செயல் தலைவா் மகாலிங்கம், துணைத் தலைவா் விநாயகம், மயிலாடி நகரத் தலைவா் நடேசன், முன்னாள் வட்டாரத் தலைவா் காலபெருமாள், மருங்கூா் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன், செயலா் ரமேஷ், நிா்வாகிகள் சுதாகா், செல்வகுமாா், ராஜாசிங், சாரங்கன், ஜான்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.